search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா முதல் மந்திரி"

    ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். #NaveenPatnaik #Odishaassemblypolls
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #NaveenPatnaik #Odishaassemblypolls
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மக்களிடையே துன்பத்தை ஏற்படுத்தி உள்ளதால், முதலில் அதில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி ஊழல் புகாருக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்தார். #NaveenPatnaik
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இடங்களில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது ஒடிசா அரசையும், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பேசும் போது, ஒடிசாவில் அரசு பணிகளை செய்வதற்கு கமி‌ஷன் கலாசாரம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பல்வேறு திட்டங்களும் தாமதமாகி முடங்கி கிடக்கின்றன. மாநில அரசு ஊழலில் திளைத்துள்ளது. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த அக்கறை காட்டுவதில்லை என்று பிரதமர் கூறினார்.

    இதற்கு நவீன் பட்நாயக் பதில் அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:-


    பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒடிசா அரசு மீது ஊழல் புகார்களை கூறி இருக்கிறார்.

    உண்மையிலேயே ஊழல் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அவர் ஆய்வு செய்து பார்க்கட்டும் உச்வாலா திட்டம், ஸ்கில் மி‌ஷன் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நினைத்தால் ஆய்வு மேற்கொள்ளலாம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஸ்மேன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விட ஒடிசா அரசு ஏற்கனவே சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள். மத்திய அரசு ரூ.5 லட்சத்துக்கு தான் காப்பீடு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு ரூ.7 லட்சம் காப்பீடு வழங்குகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டத்தை விட மாநில திட்டத்தில் கூடுதலாக 25 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்.

    மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் இதை நாங்கள் பின்பற்றுகிறோம்.

    எங்கள் அரசு மீது வேண்டும் என்றே பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    முதலில் மத்திய அரசு அதை முக்கிய பிரச்சினையாக எடுத்து கவனம் செலுத்தட்டும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #PetrolDieselPriceHike #OdishaCM #NaveenPatnaik #PMModi
    ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக்குக்கு ரூ.50 கோடி தர வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் கைதி ஒருவர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். #NaveenPatnaik
    பிலாஸ்பூர்:

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக்குக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத் தில் ரூ.50 கோடி தர வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டப்பட்டு இருந்தது.

    இந்த கடிதம் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தது என்பதை ஒடிசா மாநில போலீசார் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து அந்த மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் பிலாஸ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த புஸ்பேந்திரநாத் சவுகான் (வயது40) என்ற கைதி மிரட்டல் கடிதம் எழுதி இருந்தது தெரியவந்தது.

    கொள்ளை மற்றும் கொலை குற்றங்களுக்காக அவர் 2009-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பிரபலம் அடைவதற்காக இதுபோன்று மிரட்டல் கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார். ஒடிசா மாநில கலெக்டர் ஒருவருக்கும் இதேபோல் கடிதம் அனுப்பியதாக கூறினார். #NaveenPatnaik
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்துள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #AsianGames2018
    புவனேஸ்வரம்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்து இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் சுனிதா லக்ரா, நமிதா தோப்போ, நிலிமா மின்ஸ், தீப் கிரேஸ் எக்கா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.



    இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வீட்டுக்கு மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா நேற்று சென்று அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் ஸ்வப்னாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.   #NaveenPatnaik #AsianGames2018
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில அரசு இன்று 5 கோடி ரூபாயை இன்று வழங்கியுள்ளது. #KeralalRain #Keralafloods #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் 5 கோடி ரூபாய் அளித்து உத்தரவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக, நவீன் பட்நாயக் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசினார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். #KeralalRain #Keralafloods ##NaveenPatnaik
    ×